• Profile picture of Hazeemdeen

    Hazeemdeen

    2 months, 1 week ago

    KAPIS-Kalkudah Association of Professionals, Intellectuals, and Social Activists (

    KAPIS


    ) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, இதுவரைக்கும் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்ட தரணிகள், விரிவுரையாளர்கள், இலங்கை அரச சேவைஅதிகாரிகள் மற்றும் நிதி, கணக்கியல், விவசாயம், துணை மருத்துவம், கால்நடை விஞ்ஞானம், கலை, விளையாட்டு, ஊடகம் போன்ற துறைகளினை சேர்ந்த வல்லுநர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளடங்களாக நூற்றுக்கும் அதிகமானவர்கள் இவ் அமைப்பினுள் அங்கத்தவர்களாக இணைந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இந்த சமூகத்திற்கு இன மத பேதம் பாராமல் அவர்களுக்கு முடியுமான பங்களிப்புகளினை செய்வதற்கான நல்லண்ணத்துடனேயே இணைந்து இருக்கின்றார்கள். இவ் அமைப்பின் பிரதான நோக்கம் பல நீண்ட கால மற்றும் குறுகிய கால வேலைத்திட்டங்கள் மூலம் இப்பிரதேசம் மற்றும் இந்த நாட்டின் பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்கு தேவையான தங்களால் இயன்ற பங்களிப்புகளை வழங்குதல்.

    KAPIS இற்கான ஒரு பிரத்தியோகமான சமூக வலையமைப்பு (KAPIS Members Network System) ஓன்றும் அதனுடன் சேர்ந்த KAPIS இற்கான Web Portal ஒன்றினையும் உருவாக்கியுள்ளதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்

    KAPIS Registration
    —————————
    இந்த அமைப்பில் நுழைவதற்கான விண்ணப்பம் படிவம் நிரப்பப்பட்டு அது KAPIS இனால் ஏற்று கொள்ளப்பட்ட உடனேயே உங்களுக்கான ஒரு தனி Public User Profile ஓன்று KAPIS Members Network System இல் உருவாக்கப்பட்டுவிடும்.

    Join the KAPIS Associations or Projects
    ——————————————————
    உங்கள் User Profile இணை கொண்டு KAPIS Members Network System இல் உள்ள உங்கள் துறை சார்ந்த Association இல் இணைவதற்கான கோரிக்கையினை விடுவிக்கமுடியும், உங்கள் கோரிக்கையினை குறித்த துறைக்கு பொறுப்பான Founding/Controlling Member ஒருவரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் உங்கள் Association இல் இணைக்கப்படுவீர்கள். இந்த Association இல் KAPIS இன் உங்கள் துறைசார்ந்த வேலைத்திட்டம் தொடர்பான முக்கியமான விடயங்களை கலந்துரையாடி கொள்ளமுடியும் அல்லது இதற்கு மாற்றீடாக WhatsApp Community இனை பயன் படுத்தமுடியும்.

    KAPIS இன் Home Page இல் வகைப்படுத்தப்பட்ட ஏதாவது ஒரு வேலைத்திட்டத்தினை KAPIS அமைப்புடன் சேர்ந்து செய்ய விரும்பினால் KAPIS அங்கத்துவத்தை பெற்றெபின் உங்கள் வேலைத்திட்டம் தொடர்பான Proposal Form ஒன்றினை சமர்ப்பிப்பது மூலம் அத் துறை சார் வேலை திட்ட குழுவினுள் இணைந்து உங்கள் செயற்பாடுகளை தொடர முடியும்.

    KAPIS Project Categories
    ————————————
    1. Medical Projects.
    2. Educational Development Projects.
    3. Employment Support Projects.
    4. Agriculture and Veterinary Science Projects.
    5. Tourism Revenue Enhancement Projects.
    6. Science and Engineering Projects.
    7. Legal Aid and Awareness Projects.
    8. Sports Development Projects.
    9. Undergraduate Activities.

    KAPIS Activity Page (Similar to Facebook Timeline)
    ———————————————————————-
    உங்கள் துறை தொடர்பான அல்லது உங்களது வேலைத்திட்டம் தொடர்பான முக்கியமான விடயங்களை உங்கள் User Profile இனில் பதிவிட்டால் அப்பதிவு KAPIS Members Network System இல் உள்ள Activity Stream இனுள் வந்துவிடும், இந்த Activity Stream இனுள் KAPIS அங்கத்தவர்கள் பதிவிடும் பதிவுகள் (தனிப்பட்ட Association இனுள் பதிவிடுவதை தவிர) அனைத்தும் மொத்தமாக வெளிப்படுத்தப்படும். மேலும் இப் பதிவுகளை Facebook, Twitter போன்றவற்றிலும் பகிர்ந்து கொள்ளலாம்.

    Objective of the KAPIS Members Network System
    ————————————————————-

    KAPIS Members Network System இன் முக்கியமான நோக்கமானது இவ் அமைப்பில் பல துறைசார் அமைப்புக்களும் மற்றும் பல வேலை திட்டங்களும் நூற்றுக்ணக்கானவர்களின் பங்களிப்புடன் பலபிரிவுகளாக நடை பெற இருப்பதால் எல்லோருடைய செயற்பாடுகளையும் இவ் அமைப்பில் உள்ள எல்லா அங்கத்தவர்களும் ஒரே Stream (Activity Page) இல் பார்க்கக்கூடியதாக இருக்கும். இதன் மூலம் எல்லா வேலைத்திட்டங்களையும் ஒரே பார்வையில் இவ் உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இலகுவாக நிர்வகிக்கக்கூடியதாகவும் பாதுகாப்பானதாகவும் காணப்படும். மேலும் KAPIS இன் செயற்பாடுகளை KAPIS Members Network System மூலம் KAPIS இன்அங்கத்தவர்கள் இல்லாத பொதுவானவர்களும் அறியக்கூடியதாக இருப்பதால் KAPIS இன் வெளிப்படுத்தன்மையினை எல்லோரும் அறியக்கூடியதாக இருக்கும்.

    KAPIS ஆனது இலங்கை நாட்டினது நிறுவனங்கள் தொடர்பான சட்ட திட்டம், 2022 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் இதர சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டவாறு இயங்கும்.

    Web:

    KAPIS

    E-mail: hazeemdeen@kapis.org

Media

Friends

Profile Photo
Aathil
@aathil
Profile Photo
Fayas
@fayas
Profile Photo
ABSAN
@absan2001
KAPIS
Logo